வில்லன் ரோல்தான் ஒரே வழி.. விஜய்சேதுபதி ரூட்டை கையில் எடுக்கும் முன்னனி ஹீரோக்கள்
முன்பெல்லாம் வில்லன் ரோலுக்கு என ஒரு குறிப்பிட்ட நடிகர்கள் இருந்தார்கள் .நம்பியார், எம் எஸ் வீரப்பன், மனோகர் அப்படியே ரஜினி கமல் காலத்திற்கு வந்தால் ராதாரவி, ஆனந்தராஜ், ரகுவரன் என வில்லன் கதாபாத்திரத்திற்கு இவர்கள் தான் பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் தற்போது மாறி இருக்கிறது.
பிரபல முன்னணி ஹீரோக்களை வைத்து வில்லன் ரோலுக்கு நடிக்க வைத்து அதன் மூலம் படங்களின் ஹைப்பை அதிகரிக்க வைப்பது தான் இப்போதைய தமிழ் சினிமாவின் ட்ரெண்டாகி வருகிறது. பல ஹீரோக்கள் வில்லனாக நடித்திருந்தாலும் அதில் இருக்கும் ஹைப்பை அதிகப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் விஜய் சேதுபதி. இவருக்கு என ஒரு தனி ஃபேன்ஸ் பேஸ் இருந்தது.
அந்த நேரத்திலேயே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் தமிழ் சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் இரு நடிகர்களுக்கு வில்லனாக நடித்ததனால் அதன் மூலம் ஒரு புகழை அடைந்தார் விஜய் சேதுபதி. அதிலிருந்து அவருடைய புகழ் உச்சத்தை அடைந்தது. தொடர்ந்து வில்லனாக பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை தக்கவைத்துக் கொண்டார் விஜய் சேதுபதி.
இப்போது அவருடைய வரிசையில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்கள் வில்லன்களாக களம் இறங்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் செய்தி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி என்பதுதான். ஆரம்பத்தில் ஜெயம் ரவி அதை மறுத்து வந்தார் என்ற செய்தி வெளியானாலும் இப்போது அது உறுதியாகி இருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அந்த படத்தில் தான் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறாராம். அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்த படங்கள் சரிவுகளை சந்தித்ததனால் இப்போது இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் ஒரு வேளை அவருடைய மார்க்கெட் உயரும் என நம்பப்படுகிறது. அடுத்ததாக லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தில் லாரன்ஸுக்கு வில்லனாக மாதவன் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு காலத்தில் இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு லவ்வர் பாயாக வலம் வந்தவர் மாதவன். அவர் முதன் முறையாக இந்த படத்தில் வில்லனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அதனால் இந்த படத்தின் மீது ஒரு தனி எதிர்பார்க்கும் இருந்து வருகிறது. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் அவர் நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக அருண் விஜய் நடித்து வருகிறார்.
ஏற்கனவே அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தான் அவருடைய செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமானது. அதிலிருந்து வெற்றி படிக்கட்டுகளை தான் அவர் கடந்து வருகிறார். அதனை அடுத்து தெலுங்கிலும் அவர் வில்லனாக ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு வில்லனாக நடிக்கும் திரைப்படமாக இந்த இட்லி கடை திரைப்படம் அமைந்து வருகிறது .
டைசியாக விஜய் சேதுபதியே மீண்டும் வில்லனாக களமிறங்க இருப்பதாக ஒரு பேச்சு அடிபட்டு கொண்டு வருகின்றது. அதுவும் சூர்யா 45 படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.அந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர் எனும் போது அது கண்டிப்பாக வில்லன் கதாபாத்திரமாக தான் இருக்கும் என கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை விஜய் சேதுபதியுடன் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.