
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தில் யோகிபாபு, நயன்தாரா, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும், இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ரஜினியின் தீவிர பக்தரான ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம், தலைவர் படம் ஓடாது என்று சிலர் நினைத்தார்கள். அதிலும் குறிப்பாக ஒருவர் நிறைய விஷயங்களை செய்கிறார். யாரும் படம் பார்க்க வேண்டாம் என்று வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்திருந்தார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) January 17, 2020
ஆனால் இது எல்லாவற்றையும் மீறி தலைவர் படம் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இலைய கைல மறைக்கலாம், ஆனா மலைய மறைக்க முடியாது. மலை டா அண்ணாமலை, அந்த ஆண்டவனே நம்ப பக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.