கிரிக்கெட்டில் கலக்கும் சூரியின் மகன் – அஸ்வின் பாராட்டு… தந்தை பெருமிதம்

பிரபல நகைச்சுவை நடிகரான நடிகர் சூரியின் மகன் மதுரை அசோசியேஷன் நடத்திய 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சிறந்த கிரிக்கெட்டர் என்ற விருதை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் நடிகை நடிகர் சூரியும் ஒருவர். இவரின் மகன் சஞ்சய் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவர். தற்போது 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மதுரை அசோசியேஷன் நடத்திய 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் அவரது மகனும் கலந்து கொண்டார். அது மட்டுமில்லாமல் இந்த தொடரிலேயே சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

இந்த போட்டியை பார்வையிட வந்திருந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சஞ்சயை பாராட்டியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படத்தை சூரிய தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் அடைந்துள்ளார்.

Published by
adminram