">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனரின் மகன் ! முதல்வருக்கும் மாநில அரசுக்கும் நன்றி!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மலையாள இயக்குனர் பத்மநாபனின் மகன் குணமடைந்ததை அடுத்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கொரொனா பீதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் ஆங்காங்கே சிலர் சிகிச்சையில் குணமாகி வீட்டுக்கு செல்லும் செய்திகள் மட்டுமே பீதியைக் குறைத்து ஆறுதலை அளித்து வருகிறது. இந்நிலையில் பிரபல மலையாளப்பட இயக்குநர் பத்மகுமாரின் மகன் ஆகாஷ் கடந்த மார்ச் மாதம் பாரீஸில் இருந்து கேரளா திரும்பினார். அப்போது அவரை தனிமைப்படுத்தி இருக்கும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த இருவார சிகிச்சையில் அவர் இப்போது முழுவதுமாக குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் பத்மகுமார் மேலும் ‘எங்கள் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஆகியோர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது மாநில அரசு கொரோனாவுக்கு எதிரான போரில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவது எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்’ எனத் தெரிவித்துள்ளார்.