கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் சோர்வாக இருப்பதை உணர்ந்ததுடன் லேசாக சளி மற்றும் விட்டு விட்டு காய்ச்சல் இருந்து வந்ததால் கொரோனா பரிசோதனை எடுத்து பார்த்தபோது தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து நேற்று எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
இந்த நிலையில் எஸ் பி பி இறந்துவிட்டதாக புதிய தலைமுறை சேனலின் லோகோவை தவறாக பயன்பபடுத்தி போலியான செய்தி ஒன்று வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த எஸ் பி பியின் மகன் எஸ் பி சரண், இது முற்றிலும் பொய்யான செய்தி. தனது தந்தைக்கு சிகிச்சை அளிப்பட்டு அவர் நலமாக இருக்கிறார். எனவே, இதுபோன்ற போலியான செய்திகள் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…