சூரரைப் போற்றுக்கு மேலும் ஒரு மகுடம்... குவியும் விருதுகள்....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் இப்படத்தை அவர் ஓடிடியில் ரிலீஸ் செய்தார். ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் முதன் முதலாக ஓடிடியில் வெளியானது இதுதான் முதன்முறை.
அதோடு, இதுவரை அமேசான் பிரைமில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என சூரரைப் போற்று சாதனை படைத்துள்ளது மேலும், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்தையுமே விமர்சகர்கள் பாராட்டினர். இப்படம் தற்போது ஹிந்தியில் உருவாகவுள்ளது. இதையும் சூர்யாவே தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பெற்றுள்ளது. இந்த விருது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.