"காட்டுப்பயலே" வீடியோ பாடல் ரிலீஸ்...!
சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் கடந்த 12ம் தேதி அமேசன் பிரைமில் வெளியாகியது. இப்படத்திற்கு தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
படம் வெளியாகி அத்தனை பேரின் எதிர்பார்ப்புகளையும் நிவர்த்தி செய்துள்ளது. படத்திற்கும், சூர்யாவின் நடிப்பிற்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. Ott தளத்தில் வெளியாகியும் மாபெரும் சாதனை படைத்த சூரரைப்போற்று கோடி கணக்கில் லாபம் பார்த்துள்ளது.
இந்நிலையில் தற்ப்போது சூரரைப்போற்று படத்தில் எல்லோருக்கும் பிடித்த " காட்டுப்பயலே "வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. ரவுடி பேபி புகழ் பாடகி "தீ" பாடியுள்ள இந்த பாடல் படம் வெளியாவதற்கு முன்னதாகவே பலரது பேவரைட் பிளே லிஸ்டில் இடம் பிடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த பாடல் வீடியோ...