மாஸ்...மரண மாஸ்...பட்டய கிளப்பும் ‘சூரரைப்போற்று’ டிரெய்லர் வீடியோ
இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அதன்பின் சூர்யாவை வைத்து ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை சுர்யா தனது சொந்த பட நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்தார். ஆனால், படம் தயாராகி வெளியாகும் நிலையில் கொரோனா ஊரடங்கால் பட வெளியீடு தள்ளிப்போனது.
6 மாதங்கள் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், இப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா அறிவித்தார். அதன்படி இம்மாதம் 30ம் தேதி அப்படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இப்படத்தில் பல காட்சிகள் விமானப்படை தொடர்புடையது. எனவே, விமானப்படையின் ‘என்.ஓ.சி’ உள்ளிட்ட பல சான்றிதழ்களை பெற வேண்டியுள்ளதால் ரிலீஸ் மீண்டும் தள்ளிபோவதாக சூர்யா அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது விமானப்படையின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இதைத்தொடர்து இப்படம் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு நவம்பர் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.