More

அமேசான் பிரைமில் சாதனை படைத்த சூரரைப்போற்று – இத்தனை லட்சம் பேரா?..

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் இன்று அமேசன் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

Advertising
Advertising

தற்போது இப்படம்  பலராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. சுதா கொங்கராவின் இயக்கம் மற்றும் ஜி.வி.பிரகாஷின் இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்வதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தை அமேசான் பிரைமில் இதுவரை 11 லட்சம் பேர் பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை அமேசான் பிரைமில் தமிழ படங்களை பார்த்த மொத்த எண்ணிக்கையை விடவும் இது அதிகம் என்பதுதான் சிறப்பான விஷயம். 

Published by
adminram

Recent Posts