போதும்டா விட்ருங்க!.. மன்னிப்பு கேட்டுக்குறன்… கதறும் பாலகிருஷ்ணா இயக்குனர்…

8bd10db99f674c9e2790b6e7e82ed0b9-1-2

தெலுங்கு திரைப்படங்களின் சண்டை காட்சிகள் என்றாலே அதகளம்தான். அதிலும் பாலகிருஷ்ணா நடிக்கும் திரைப்படங்களில் இடம் பெறும் சண்டை காட்சிகள் படு பயங்கரமாக இருக்கும். அவர் நடனமாடுவதும் தனி ஸ்டைல்தான். யுடியூபில் அதிகமாக அவரின் நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளே அதிகமாக கிண்டலடிக்கப்பட்ட வீடியோக்கள் அதிகம் இருக்கும். 

குறிப்பாக, பாலகிருஷ்ணா நடித்த ‘பல்னாடி பிரம்மநாயுடு’ படத்தில் இடம் பெற்ற ரயில் சண்டைக் காட்சிதான் அதிகமாக கிண்டலடிக்கப்பட்டு வருகிறது காரணம், வீர வசனம் பேசி தொடையைத் தட்டி கையை நீட்டுவார். அப்போது எதிரே வரும் ரயில் பின்னோக்கி செல்லும். இந்த காட்சிகள் பெரிதாக கிண்டலடிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் கோபால் தற்போது இதுபற்றி பேசியுள்ளார்.  இப்படி காட்சிகள் வைத்ததற்காக நான் பெரிதும் கிண்டலடிக்கப்பட்டேன். அதற்காக வருந்துகிறேன். அதற்கான மொத்த பழியையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Categories Uncategorized

Leave a Comment