வலிமை படத்திற்காக சிறப்பு பயிற்சி?- போலீஸ் அதிகாரியுடன் தல அஜித்…

Published on: February 8, 2020
---Advertisement---

7a1f1ef6bdeed02b62d66b8af8ea0326

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் அதே வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடிப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. 

இந்நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவருடன் அஜித் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் போலீஸாக நடிப்பதால் நிஜ போலீஸ் அதிகாரிகளிடம் அவர் சில அறிவுரைகளை பெற்றதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

b245b6ec22487427fd5ef50afe26cdf9

இப்புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment