கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அவர்களின் விந்தணு உற்பத்தி உள்ளிட்டவை பாதிக்கபபடலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில் இதுவரை 8000 பேருக்கு மேல் அதற்குப் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் பேராசிரியர் லி யுஃபெங் “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. மேலும் அந்த வைரஸை சோதனை செய்ததில் ஆண்களின் விந்தணுக்களையும் தாக்கும் ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார். இதன் மூலம் ஆண்களின் பாலியல் வாழ்க்கை பாதிக்கபடலாம் என சொல்லப்படுகிறது.
ஆனால் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களை ஆய்வு செய்த பின்னரே அதுகுறித்து கூற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…