Sreeleela: பக்கத்துவீட்டு பொண்ணு போல இப்படியா.. ஸ்ரீலீலா செஞ்ச செயல் அப்படிங்க!

Published on: December 5, 2025
---Advertisement---

தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ரீலீலா. கிஸ் என்ற கன்னட படம் மூலம் அறிமுகம் ஆனவர் இவர்.தெலுங்கில் பெல்லி சாண்டாடி படம் மூலம் அறிமுகம் ஆனார்.

ஸ்ரீலீலா நடனம் நன்றாக ஆடக்கூடியவர் புஷ்பா 2 படத்தில் இடம் பெற்ற சப்புனு அறைவேண்டா பாடலே இதற்கு உதாரணம். இவரது நடனத்திற்காகவே தெலுங்கில் ரசிகர்கள் அதிகம் உண்டு. சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகும் பராசக்தி படம் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்.

sreeleela

இந்த நிலையில் திருவண்ணாமலையில் உள்ள சிவன் கோவிலுக்கு  பராசக்தி படம்  வெற்றி பெற வேண்டி  ஸ்ரீலீலா சாமி தரிசனத்திற்காக வந்தார். பொதுவாகவே நடிகைகள் என்றால் பொது இடங்களில் காட்டும் பந்தா சொல்லி மாளாது. ஆனால் ஸ்ரீலீலா பொதுமக்களுடன் சகஜமாக பழகினார். ஒருவரிடம் கூட முகம் காட்டாமல் சாதரணாமக தோள் மீது கை போட்டு கொண்டு பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Video Thanks: Behindwoods

Leave a Comment