விஜய்சேதுபதி படத்தை புறக்கணிப்போம் - இலங்கை தமிழர்கள் எதிர்ப்பு
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகார அறிவிப்பை அவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
ஆனால், தமிழராக இருந்தாலும் இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என இலங்கை தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மீறி நடித்தால் அவரின் திரைப்படங்களை புறக்கணிப்போம் எனவும் கூறி வருகின்றனர். மேலும், இலங்கை தமிழர்களை ஆதரிக்கும் பலரும் சமூக வலைத்தளங்களில் விஜய்சேதுபதிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திரு விஜய் சேதுபதிக்கு ஒரு வேண்டுகோள்... pic.twitter.com/1iMdShp2II
— Mr.பழுவேட்டரையர் (@mrpaluvets) October 10, 2020
முரளியின் இந்த டயலொக்கை @VijaySethuOffl அவர்கள் தனது படத்திலும் பேசுவாரா? pic.twitter.com/cpyTNgidzr
— shalin (@uthayashalin) October 9, 2020