காதல் கதைகளில் கசிந்துருகிய ஸ்ரீகாந்தின் சூப்பர்ஹிட் படங்கள்

தமிழ்சினிமாவில் மென்மையான கதாநாயகர்களில் இவரும் ஒருவர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களில் நடித்தவர். 2002ல் வெளியான ரோஜாக்கூட்;டம் என்ற படத்தில் அறிமுகமானார். பார்த்திபன் கனவு மற்றும் ஏப்ரல் மாதத்தில் படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் படங்கள் பெரும்பாலும் காதலை மையமாகவே கொண்டு பின்னப்பட்டிருக்கும். காதல் கதைகள் என்றால் இவருக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி. கசிந்து உருகி விடுவார். 

ஸ்ரீகாந்தின் வாழ்க்கைத்துணைவி வந்தனா. கரு.பழனியப்பன் இயக்கத்தில் இவர் நடித்த பார்த்திபன் கனவு படத்துக்கு சிறந்த நடிகருக்கான மாநில திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது. இயக்குனர் ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்து தன் திரையுலகப்பயணத்தில் அடுத்த படிக்கல்லுக்கு முன்னேறிச் சென்றார். 

மனசெல்லாம், ஜூட், போஸ், வர்ணஜாலம், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பம்பரக்கண்ணாலே, மெர்க்குரி பூக்கள், உயிர், கிழக்கு கடற்கரை சாலை, வல்லமை தாராயோ, பூ, இந்திர விழா, ரசிக்கும் சீமானே, துரோகி, மந்திரப்புன்னகை, சதுரங்கம், நம்பியார், சௌகார்பேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இவற்றில் இருந்து சில படங்களைப் பார்க்கலாம். 

ரோஜாக்கூட்டம்

2002ல் வெளியான இப்படத்தை சசி இயக்கினார். வி.ரவிச்சந்திரன் தயாரித்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்தார். ஸ்ரீகாந்த், பூமிகா, ஆகாஷ், விஜய் ஆதிராஜ், ரகுவரன், ராதிகா, ரேகா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு முக்கோண காதல் கதை. தான் நேசிக்கும் பெண் தன் நண்பனை நேசிக்கிறாள் என்றதும் மனம் உடைகிறான் இளைஞன். நட்புக்காக அவர்களது காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கிறான். இறுதியில் குடும்பப்பிரச்சனையால் காதல் கைகூட சிக்கல் ஏற்படுகிறது. கடைசியில் காதலியை கரம் பிடித்தது யார் என்பதை வெள்ளித்திரை விளக்குகிறது. 

அண்ணா சாலையில், ஆப்பிள் பெண்ணே நீ யாரோ, அழகின் அழகே நீ, மொட்டுகளே மொட்டுகளே, புத்தம் புது ரோஜாவே, சுப்பம்மா, உயிர் கொண்ட ரோஜாவே ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 100 நாள்களை கடந்து ஓடி வெற்றி கண்ட படம். 

பார்த்திபன் கனவு

கரு.பழனியப்பன் இயக்கத்தில் 2003ல் வெளியான படம் பார்த்திபன் கனவு. ஸ்ரீகாந்த், சினேகா, மணிவண்ணன், விவேக், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையில் பாடல்கள் அத்தனையும் தேன் சிந்தும் ரகம். கனாக் கண்டேனடி, தீராத தம் வேண்டும், பக் பக், என்ன தவம் செய்தனை, என்ன செய்ய, வாடி மச்சினியே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. காதல் கதைதான் என்றாலும் திருப்பங்கள் நிறைந்து பரபரப்புடன் போகும் திரைக்கதையே படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. 

பூ

2008ல் வெளியான இப்படத்தில் ஸ்ரீகாந்த், பார்வதி மேனன், இன்பநிலா உள்பட பலர் நடித்துள்ளனர். வெயிலோடு போய் என்னும் ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதையைத் தழுவி படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். சூ..சூ..மாரி, மாமன் எங்கிருக்கான், ஆவாரம் பூ, தீனா, சிவகாசி ரதியே, பாச மழை ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. முதல் 4  பாடல்களை கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். 

மெர்க்குரி பூக்கள்

குடும்பப்படம். இளமையான படம். சீரியஸ் இருந்தாலும் காமெடியும் சம விகிதத்தில் கலந்த படம். ஸ்ரீகாந்த் – மீரா சம்மதமின்றி திருமணம் நடக்கிறது. எனவே கொஞ்ச நாள் இப்படி இருப்போம். அதன் பிறகு நேரம் வரும்போது பிரிந்து விடுவோம் என்று முதலிரவில் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல காதல் மலர்கிறது. அந்தக் காதலைச் சொல்வதற்குள் பிரிவு வந்து விடுகிறது. படத்தில் திரைக்கதையை வித்தியாசமாக தந்திருக்கிறார் இயக்குனர் ஸ்டான்லி. மீரா ஜாஸ்மின் துருதுருவென குறும்பாக வருகிறார். ஸ்ரீகாந்த் காமெடி செய்வாரா என ஆச்சரியப்படுத்துகிறார். கருணாஸ் , டெல்லிகணேஷ் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜாவின் 

மனசெல்லாம் 

 2003ல் வெளியான இப்படத்தை சந்தோஷ் இயக்கினார். ஸ்ரீகாந்த், திரிஷா, நாசர், வையாபுரி, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர். இனிய நாள், ஒரு ஜோடிக்குயில், நீ தூங்கும் நேரத்தில், நிலவினிலே, இனிய நதி, சின்ன குயிலே, மிட் நைட்டிலே, ஹைவேசிலே ஆகிய பாடல்கள் மனதை வருடுபவை.

Published by
adminram