வயதானவர் என்று ஸ்டாலினை தான் சொல்லியிருப்பார் – உதயநிதிக்கு டிவீட்டுக்கு கராத்தே தியாகராஜன் பதில் !

உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்வீட்டில் வயதான பெரியவர் என்று சொல்லி இருப்பது ரஜினியை அல்ல என்றும் ஸ்டாலினை தான் என்றும் கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வேண்டாம் என்றும் அதனால் தனது மனது பாதிக்கப்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் இந்த பதிவை கேலி செய்யும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்தலைவர் ஸ்டாலின் தலைமையில் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு வன்முறை என்று அஞ்சும் வயதான வசதியான பெரியவர்களை சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவிட்டு வரவும்தெரிவித்தார்.

இது சம்பந்தமாக இணைய உலகில் திமுகவினரும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடந்துவந்தன. இது தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் ‘அந்த டிவிட்டில் ரஜினியை தான் பெரியவர் என்று குறிப்பிட்டு இருப்பதாக அதிமுகவினர் கூறியுள்ளனர். ரஜினியை விட ஸ்டாலின் தான் வயதானவர் போல் இருக்கிறார். அவருக்காக அவரது மனைவி கோவில் கோவிலாக சென்று வருகிறார் ஆகையால் உதயநிதி தனது தந்தை ஸ்டாலினைதான் வயதானவர் என்று குறிப்பிட்டிருப்பார். ‘ எனத் தெரிவித்துள்ளார்.

Published by
adminram