தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முன்பு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய துவங்கியது. அதன்பின், மேலும் ஒரு வாரம் அதாவது ஜூன் 14ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் ‘நோய்த்தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன். திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நான் மேற்கொள்வது அரசு சார்ந்த பணிகள். எனவே,என்னை நேரில் சந்திக்க ஆர்வம் காட்ட வேண்டாம்’ என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொங்கல்…
முருங்கைக்காய் என்றாலே…
சுதாகொங்கரா இயக்கத்தில்…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…