கமலுக்கு அப்புறம் அந்த விஷயத்துல சிம்பு தான் மாஸ்... அவரைப் போயி இப்படி சொல்றாங்களே..!

by ராம் சுதன் |

நடிகர் சிம்பு குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் கோபிநாத் சில கருத்துகளைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்ப்போமா...

'ஒஸ்தி' படத்துக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வரல. சிம்புவோடு 90 நாள் சூட்டிங் பண்ணினோம். ஒரு நாள் கூட 10 நிமிஷம் கூட லேட் பண்ணினது கிடையாது. அப்படி ஒரு ஆர்டிஸ்ட். மைசூர்ல காலை 7 மணிக்கே சூட்டிங். சண்டேல அவரை கிரிக்கெட் விளையாட விட்டுருவோம்.

லைட்மேன், அசிஸ்டண்ட் கேமராமேன், அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ், டெக்னீஷியன்கள்னு யாரு யாருக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமோ அவங்களை எல்லாம் அவரு கூட விளையாட விட்டுருவோம். அங்கே சாப்பாடு எல்லாம் போயிடும். அவரு வயசு அப்படி. அதுல என்ன இருக்கு. அவரால நமக்கு எந்த இதுவுமே இல்லையே...அடுத்த நாள் வழக்கம்போல சூட்டிங் வந்துடுவாரு.

ஒரு தடவை சுந்தர்.சி. சார் வேற எதுக்கோ அங்க வந்துருந்தார். அங்க லொகேஷன் பார்க்கறதுக்கு. அவரு எங்கிட்டேயே கேட்டாரு. 'கோபி சார் உங்க கிட்ட எப்படி? அவருக்கிட்ட ஒர்க் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொல்வாங்களே. பண்ணலாமா'ன்னு கேட்டாரு. 'தாராளமா பண்ணலாம் சார். அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை கிடையாது. எனக்கு நல்லா பண்ணிருக்காருங்கறதை தனியா கூட சொல்ல மாட்டேன். அவரு கரெக்டா தான் இருக்காரு. அவருக்கு வேற ஏதோ பிரச்சனைகள் இருக்கு. அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்'. அப்படின்னு சொன்னேன்.

இன்னைக்கும் கமல் சாருக்கு அப்புறம் எல்லா டிபார்ட்மெண்டையும் தெரிஞ்சி வச்சிருக்கறவரு அவரு தான். முதல் விஷயம் அவரு வந்து ஒரு டைரக்டரை அண்ணாந்து பார்க்குற மாதிரி ஒரு பொசிஷன்ல இருந்தா அவரு எதுவுமே பண்ண மாட்டாரு. நான் என்னோட அனுபவத்துல ஃபீல் பண்றது அதுதான். எங்கிட்ட கூட ஒரு கேமராமேனா அவ்வளவு மரியாதையா பேசுவாரு. அவ்வளவு விஷயங்கள் கேட்டுத் தெரிஞ்சிக்குவாரு.

அவரு சொல்லும் போது தவறான புரிதல்ல இதை செஞ்சிடலாம்னு தவறான நம்பிக்கையை கொடுத்துட்டு அப்படி இல்லாதபட்சத்துல தான் அவருக்கு மரியாதை போயிடும். அப்புறம் ஆட்டோமேடிக்கா எல்லாமே மாறிடும். என்னோட புரிதல்ல சிம்புவை இப்படித்தான் பார்த்திருக்கேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடித்த படம் தான் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. இந்தப் படத்தில் சிம்புவுடன் மேகா ஆகாஷ், காத்ரீன் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இது 2019ல் வெளியானது.

Next Story