குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. பல மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் பல இடங்களில் நடந்த மோதலால் வன்முறை கையில் எடுக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் போலீசாரே வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் ‘இது தேவையில்லாத போராட்டம். பெண்களை சைட் அடிக்கவே அங்கே மாணவர்கள் ஒன்று கூடுகின்றனர். இப்படி செய்தால் விடுமுறை கிடைக்கும் என நம்பியே போராட்டம் செய்து வருகின்றனர்’ எனப்பேசியுள்ளார்.
இதற்கு சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.
2017 மே…
விவாகரத்துக்கு பிறகு…
முன்பெல்லாம் சினிமா…
தமிழ் சினிமாவில்…
ஏஆர்.ரகுமான், சாய்ரா…