விடுதி அறையில் தூக்கில் தொங்கிய மாணவன் – போலிஸ் விசாரணை !

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த மாணவன் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரின் மகன் ஹரிஷ். இவர் காரமடை கண்ணார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மதியம் இவர் உடல்நிலை சரியில்லை என சொல்லி ஆசிரியரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு விடுதிக்கு சென்றுள்ளார்.

பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் விடுதிக்கு சென்ற போது ஹரிஷ் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் வந்து பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து போலீஸார் வந்து வழக்குப் பதிவு செய்து சக மாணவர்களிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
adminram