சரவணா ஸ்டோர்ஸ் எஸ்கலேட்டரில் சிக்கிய மாணவன் –மருத்துவமனையில் அனுமதி !

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எஸ்கலேட்டரில் சிக்கிய 13 வயது மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ளது சரவணா ஸ்டோர்ஸ் கடை. இங்கே பொங்கலை முன்னிட்டு கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தாயுடன் கடைக்கு வந்த 13 வயது சிறுவனான ரனில் பாபு எதிர்பாராதவிதமாக எஸ்கலேட்டர் படிக்கட்டியில் சிக்கி விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து  குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யபப்ட்டு வருகிறது.

Published by
adminram