2 நாளுக்கு முன்பே ஓடிடியில் வெளியாகும் சுல்தான்...ரசிகர்கள் மகிழ்ச்சி

by adminram |

15397a91258c1d09fb770576727d422f

ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால் உள்ளிட பலரும் நடித்து ஏப்ரல் 2ம் தேதி வெளியான திரைப்படம் சுல்தான். இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றாலும் முதலுக்கு மோசமில்லை என்கிற லெவலில் வசூல் செய்தது. மே 2ம் தேதி இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், கொரோனா பரவலை தடுப்பதற்காக தியேட்டர்கள் மூடப்படப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

037da0ff208681900281f3625e874825-1

எனவே, அறிவித்த தேதிக்கு 2 நாளைக்கு முன்பே அதாவது ஏப்ரல் 30ம் தேதியே சுல்தான் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, கொரோனா பாதிப்புகு பயந்து சுல்தான் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்காமல் இருந்தவர்கள் ஹாட் ஸ்டாரில் பார்க்க தயாராகுங்கள்...

Next Story