ரஜினியை விடாது தொடரும் சன் நிறுவனம்: என்ன காரணம்?

Published On: December 17, 2019
---Advertisement---

028b6a4ea122984069ab8d60326627bc

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்தால் திமுகவுக்கு தான் பெரும் இழப்பு என அரசியல் விமர்சகர்கள் ஒரு பக்கம் கருத்துக் கூறி வந்தாலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருவதும் அவருடைய படங்களின் உரிமையை வாங்கி வருவதுமான வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளது

சூப்பர் ஸ்டார் நடித்த முந்தைய திரைப்படமான ’பேட்ட’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், அவருடைய அடுத்த படமான ’தலைவர் 168’ படத்தையும் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ரஜினி நடித்து முடித்துள்ள ’தர்பார்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ’பேட்ட’, ’தர்பார்’ மற்றும் ’தலைவர் 168’ ஆகிய மூன்று அடுத்தடுத்த ரஜினி படங்களும் சன்டிவி கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்தின் அனைத்து படங்களையும் தொடர்ச்சியாக சன் டிவி நிறுவனம் பெற்று வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தர்பார் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றதை அடுத்து இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் பெற சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ’தர்பார்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வாங்க மேலும் மூன்று நிறுவனங்கள் கடும் போட்டியில் உள்ளது என்பதால் இவற்றில் எந்த நிறுவனம் தர்பார் படத்தை கைப்பற்ற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Comment