விஜய் டிவிக்கு ஆப்பு!…இளையராஜாவை அலேக்காக தூக்கிய சன் டிவி….

தமிழ் சினிமாவில் 80களின் துவக்கத்தில் இசையமைப்பாளராக நுழைந்து இசை உலகில் முடி சூடா மன்னனாக வலம் வந்தவர் இளையாராஜா. தமிழ் சினிமா இசை ரசிகர்கள் ஹிந்தி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் பாடல்களை கேட்க வைத்தவர்.  இவர் இசையமைத்தால் படங்கள் ஹிட் என்கிற நிலையை உருவாக்கினார். இப்போதும் இவரின் பாடல்களே பலருக்கும் ஆறுதலாகவும், மனதிற்கு மருந்தாகவும் இருக்கிறது.

Ilayaraja

இளையராஜா ஆர்க்கெஸ்ட்ரா உள்ளிட்ட பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும் சின்னத்திரைக்கு அவர் சென்றதில்லை. ஆனால், தற்போது அவர் சின்னத்திரையில் தோன்றவுள்ளார். சன் டிவியில் ‘ராஜபார்வை’என்கிற நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. சமீபத்தில் இதற்கான புரமோ வீடியோவும் வெளியானது.

Ilayaraja

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஓரம் கட்ட இந்த நிகழ்சியை சன் தொலைக்காட்சி நடத்துவதாக தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கவுள்ளார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் சூப்பர் சிங்கள் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை குறைப்பதுதான் சன் டிவியின் பலே திட்டமாம்!…

 

Published by
adminram