விஷால் - நயன் நெருக்கடியால் திக்குமுக்காடி நிற்கும் சுந்தர் சி.. வெற்றி கொடுத்தும் நிம்மதி போச்சே
வெற்றிக்களிப்பில் சுந்தர் சி: மதகஜராஜா வெற்றியை கொடுத்ததும் கொடுத்தது சுந்தர் சி நிம்மதியில்லாமல் போனதுதான் மிச்சம். 12 வருடங்களுக்கு முன்பு வர வேண்டிய திரைப்படம் மதகஜராஜா. பொருளாதார நெருக்கடியால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. எப்படியோ ஒரு வழியாக பொங்கல் ரிலீஸாக படம் வெளியாகி பட்டையை கிளப்பியது. இன்று வரை அந்தப் படத்திற்கு ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.
நயன் கால்ஷீட்: வசூலில் படம் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்த நிலையில் மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குவதாக இருந்தார். ஐசரி கணேசும் அதில் முனைப்பு காட்டினார். ஆனால் நயன் தாரா ஒரு பக்கம் ஏப்ரல் மாதம் கடைசியில்தான் கால்ஷீட் கொடுக்க முடியும். எல்லா மொழிகளிலும் பிஸி என சொன்னதால் சுந்தர் சி மீண்டும் விஷாலை வைத்து ஒரு படம் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
விஷாலின் சம்பளம்: அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் விஷாலுக்கு சம்பளம் என்று தனியாக இல்லாமல் ப்ராஃபிட் ஷேர் என்ற அடிப்படையில் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது நிலைமையே வேறு மாதிரி ஆகிவிட்டதாம். ஒரு பக்கம் நயன் மார்ச் மாதமே நான் கால்ஷீட் தருகிறேன் என்று வந்து நிற்கிறாராம். இன்னொரு பக்கம் விஷால் பிராஃபிட் ஷேர் எல்லாம் வேண்டாம் என்பது மாதிரி பேசுகிறாராம்.
ஆக மொத்தம் இரண்டு படங்களுமே ஒரே நேரத்தில் வந்து நிற்பதால் சுந்தர் சி எந்த படத்தை முதலில் எடுப்பது என்ற நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சுந்தர் சியை பொறுத்தவரைக்கும் அவருடைய மார்கெட் இன்று நல்ல நிலையில் இருப்பதால் மதகஜராஜாவின் வெற்றி சூட்டோடு மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுத்துவிட வேண்டும் என்ற முடிவில் ஐசரி கணேஷும் இருக்கிறார்.
சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகும் படத்தை ஏசி சண்முகம் தான் தயாரிக்கிறாராம். அந்த படம் ஆம்பள 2 படமாகக் கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. எப்படியோ இந்த இரண்டு படங்களை தவிர்த்து சுந்தர் சி வடிவேலு கூட்டணியில் உருவாகும் கேங்க்ஸ்டர் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.