தமிழ் சினிமாவில் வெற்றிக்கு உத்திரவாதம் உள்ள கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. ஹிட் கொடுத்த பல இயக்குனர்களே காணாமல் போய்விட்ட நிலையில் சுந்தர்.சி 30 வருடங்களாக வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய எல்லா படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்த படங்கள்தான்.
இடையில் நடிகர் அவதாரமும் எடுத்த சுந்தர்.சி பல ஹிட் படங்களையும் கொடுத்தார். ஒருகட்டத்தில் அவர் இயக்கும் படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கிவிட்டார். அவர் இயக்கி நடித்த கேங்கர்ஸ் படம் சரியாக போகவில்லை. தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. ஒரு படத்தின் 2வது பாகத்திற்கு இவ்வளவு பட்ஜெட் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது தயாரிப்பாளருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதைத்தொடர்ந்து புரமோ ஷூட் போல ஒன்றையும், படத்தின் சில காட்சிகளையும் தயாரிப்பாளருக்கு போட்டு காட்டியிருக்கிறார் சுந்தர்.சி. இதைப்பார்த்ததும் போட்ட காசு வொர்த்துதான் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஐசரி கணேஷ். சுந்தர்,சி உருவாக்கிய வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…