ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு... பீலிங்கில் சின்னத்திரை நடிகை போட்ட கிளாமர் ஆட்டம்

by adminram |   ( Updated:2021-09-20 22:33:43  )
actress
X

bede7e6e3af8c5da718ce110f0898329-2

சன் டிவியில் சீரியல்களுக்கே பஞ்சம் இருக்காது. அதிலும் ப்ரைம் டைம் சீரியல் என்றால் கேட்கவா வேணும். நல்லா இருக்கோ இல்லையோ ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அந்த வகையில், பிரபலமாக இருந்த சீரியல்களில் ஒன்று‘கண்மணி’. பூர்ணிமா பாக்கியராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் லீஷா எக்லெர்ஸ்.

தழைய தழைய சேலைக் கட்டிகொண்டு அவர் நடித்த நடிப்பால் பலரையும் கட்டிப் போட்டார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், முழுக்க முழுக்க சென்னையில் வளர்ந்தவர் லீஷா எக்லர்ஸ். பலே வெள்ளைய தேவா, பொது நலன் கருதி போன்ற சில படங்களில் நடித்து இருக்கிறார். இதில் என் அன்புள்ள லிசா படத்தில், லிசா என்னும் பேயாக நடித்திருக்கிறார். சின்னத்திரை தான் இவரை ரசிகர்களிடம் அடையாளம் காட்டியது. குடும்ப குத்து விளக்காக நடித்தாலும் லீஷா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் செய்யும் அட்டகாசம் ஜாஸ்தியாகி இருக்கிறது. கொஞ்சம் நஞ்சமல்ல எக்கச்சக்க கிளாமரை அள்ளி வீசுவார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகும். ஆனால், தற்போது அவர் கணக்கில் எந்த படங்களும் இல்லை.

3a67a3f972eef43baeabe68c4df239ca

இதுகுறித்து, அம்மணி தனது இன்ஸ்டாவில் அளித்துள்ள விளக்கத்தில், எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது எனக் கூறி இருக்கிறார். இருந்தும், ஒரு சில படங்களை மீண்டும் பதிவேற்றி தனது ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார்.

Next Story