More

சூப்பர் ஐடியாவா இருக்கே…! ஆண்ட்ரியா சொல்றத கேளுங்க…

கொரோனா காலகட்டத்தில வீட்ல சும்மாவே இருந்தா போரடிக்கும்…வெளியேவும் போக முடியாது. ஊரடங்கு…! மீறி போனா வீணா அபராதம் கட்ட வேண்டியதாயிரும்…அதாவது பரவாயில்ல…கொரோனா வந்து பத்திகிச்சின்னா என்னா பண்றது? உசுரோடல்லாம் விளையாட முடியாதுப்பா நம்மால…அப்படின்னா…ஆண்ட்ரியா சொல்றத கேளுங்க… 

கொஞ்சம் ரெஸ்ட் கெடச்சா போதும். டிராயிங், புக் ரீடிங், செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது என்று டைம் பாஸ் பண்ணும் நடிகைகள் ஏராளம். 

ஆனா…விஸ்வரூபம் ஆண்ட்ரியா கொஞ்சம் விதிவிலக்கு. பயனுள்ள முறையில் ஓய்வு நேரத்தைக் கழிப்பது எப்படி என்று நமக்கு சொல்லித்தருகிறார். ஏன்…அவரே செய்தும் காட்டியுள்ளார். செடி, கொடிகள் வளர்ப்பது தான் அது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் தான் வளர்த்த பசுமை செடிகளைக் காட்டுகிறார். அப்போது ஆரம்பித்தது இப்போது வரை தொடர்கிறது. செடி, கொடிகள் நம்மைச் சுற்றிலும் பசுமையாக இருக்கும்போது நமக்கு வாழும் இடம் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. 

உங்கள் வீட்டில் பால்கனி இருந்தால் செடிகளை வளர்க்கலாம். இல்லைன்னா, வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளருங்கள். எனது வீட்டின் உள்ளே, வெளியே தாவரங்கள் வளர்ப்பதால் நேர்மறை ஒளியை உண்டாகிறது. அதை நான் உணர்கிறேன். இந்த இருண்டகாலத்தை ஒளிமயமாக்க அனைவரும் பசுமை இல்லத்தை உருவாக்குங்கள் என்கிறார், ஆண்ட்ரியா…அவர் சொல்றதுல எந்;த தப்பும் இல்லை. செய்துதான் பாருங்களேன். 
 

Published by
adminram