சம்பளமா அதெல்லாம் வேண்டாம்… வித்தியாசமாக சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் !

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம்வரும் மகேஷ் பாபு சமீபத்திய தனது படமான சரிலேறு நீக்கவேரு என்ற படத்தின் மூலம் 80 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மகேஷ் பாபு நடிப்பில் சங்கராந்தி பண்டிகையை தொடர்ந்து சரிலேறு நீக்கவேரு என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் மகேஷ் பாபு 80 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் படி மகேஷ் பாபுவின் சம்பளம் 20 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்தப் படத்துக்காக சம்பளம் வாங்கிக் கொள்ளாத அவர் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமை ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு 80 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இனி வரும் படங்களில் எல்லாம் அவர் இந்த நடைமுறையையே பின்பற்ற இருப்பதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram