More

வரி கட்ட தயங்கும் சூப்பர்ஸ்டார்கள்!.. வசனம் எல்லாம் சினிமாவில் மட்டும்தானா?….

நடிகர் விஜய் தான் வாங்கிய சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தை அனுகி தலையில் குட்டு வாங்கிய விவகாரம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 

Advertising
Advertising

விஜய் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் எனும் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இங்கிலாந்து ராணி எலிசபெத் அதே காரைத்தான் பயன்படுத்தினார் என்பது கூடுதல் தகவல். இந்திய சட்டப்படி வெளிநாட்டிலிருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்தால் அதற்குண்டான வரியை செலுத்த வேண்டும். அந்த வரி அரசுக்குதான் செல்லும். விஜய் வாங்கிய கார் குறைந்த பட்சம் ரூ.6 கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, சில லட்சங்கள் வரியாக செலுத்த வேண்டும்.

ஆனால், அந்த வரியை கட்ட வேண்டாம் என கருதிய விஜய் நீதிமன்றத்தில் விலக்கு கேட்டு மனு தொடர்ந்தார். 8 வருடம் கழித்து தற்போது தீர்ப்பு வந்திருக்கிறது. விஜயின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அந்த அபாரத தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளிதுள்ளார்.அதோடு, திரைப்படங்களில் சமூக நீதிக்கு பாடுபடுவது போல் நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்க கூடாது எனவும் நீதிபதி அறிவுரையும் செய்துள்ளார்.

ரூ.100 கோடி சம்பளம் பெறும் விஜய் சில லட்சங்களை வரியாக செலுத்தியிருந்தால் விஜய்க்கு இந்த அவமானம் நேர்ந்திருக்காது. ஆனால், அவர் அதை செய்ய தவறியிருக்கிறார். விஜய் நிச்சயம் வரி ஏய்ப்பு செய்யவில்லை. ஆனால், அந்த வரியை கட்டாமல் இருக்கும் வாய்ப்பை தேடியுள்ளார். அதனால்தான் நீதிபதியிடம் அறிவுரை பெறும் நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விஜய் மட்டும்தான் இதை செய்தாரா என்றால் இல்லை.!.

டிடிவி தினகரன் உட்பட சில அரசியல்வாதிகளும் இதில் சிக்கியுள்ளனர். பல வருடங்கள் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து தீர்ப்பு வெளிவந்துள்ளது. நடிகர் தனுஷ் கூட சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து ரூ.2 கோடிக்கு ஒரு சொகுசு வார் வாங்கி, வரி கட்ட மாட்டேன் என நீதிமன்றம் சென்ற சம்பவமும் நடந்தது. சச்சின் தெண்டுல்கர் இதேபோல் நீதிமன்றம் சென்று வரி விலக்கும் பெற்றார். 

அப்படி என்றால் சச்சினுக்கு இரு நீதி? விஜய்க்கு ஒரு நீதியா என கேள்வி எழும்?.. சச்சின் திரைப்படங்களில் நடித்து சமூக கருத்துக்களை பேசவில்லை. தவறுகளை தட்டிக் கேட்பதில்லை. சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. நாடு முன்னேறுவது பற்றி அவர் பேசுவதில்லை. எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் எல்லாம் அவருக்கு இல்லை.. முக்கியமாக முதல்வர் பதவி மீதெல்லாம் அவருக்கு ஆசையில்லை.. ஆனால், இதுவெல்லாம் விஜய்க்கு இருக்கிறது…அவர் வரி கட்ட யோசித்ததுதான் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

அவரை கடவுளாக பார்க்கும் விஜய் ரசிகர்களுக்கு இதுவெல்லாம் புரிய வாய்பில்லை. என் தலைவன் என்ன செய்தாலும் அவரை நான் ஆதிரிப்பேன் என்பதே அவர்களின் நிலைப்பாட்டை இருக்கிறது. அதன் விளைவுதான் #WeSsupportThalapathyVijay என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் நேற்று டிரெண்டிங் ஆனது. அதோடு, விஜய் ஏற்கனவே வரி கட்டு விட்டார் என சில ரசீதுகளையும் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் உண்மையில்லை. விஜய் வரி கட்டியிருந்தால் அந்த வழக்கு அப்போதே முடிந்திருக்கும். இப்போது ஏன் தீர்ப்பு வருகிறது?. இந்த குறைந்தபட்ச புரிதல் கூட ரசிகர்களுக்கு இல்லை.

பொதுவாக நடிகர்கள் சாமானியர்கள் போல் இல்லாமல் பல கோடிகளை சம்பளமாக பெறுபவர்கள். அதனால்தான் அந்த திரையில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும், தங்களின் மார்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் அவர்கள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். ஆனால், திரையில் சமூக அவலங்களை பேசும் அவர்கள் நிஜ வாழ்வில் அதை கடைபிடிக்கிறார்களா என்பதை ரசிகர்கள் யோசிக்க வேண்டும். இதைத்தான் ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது. ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என நீதிபதி கண்டித்துள்ளார்.

நடிகர் ரஜினியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கடந்த வருடம் கொரோனாவை காரணம் காட்டி தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறாமல் வருமானம் இல்லை. எனவே சொத்துவரி ரூ.6.56 லட்சத்தை கட்டமாட்டேன் என நீதிமன்றத்தை நாடினார்.  நீதிமன்றம் எச்சரித்த பின் அந்த தொகையை அவர் செலுத்த வேண்டியதாயிற்று.. ரஜினியின் சம்பளம் ரூ.100 கோடியை தாண்டிவிட்டது. அண்ணாத்த படத்திற்கு அவருக்கு ரூ.110 கோடி சம்பளம் என செய்திகள் வெளியானது. இதில் முக்கிய விஷயம் என்னவெனில், நடிகர்கள் தாங்கள் பெறும் சம்பளத்தில் அரசுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி கட்ட வேண்டும். ஆனால், அதையும் தயாரிப்பாளர் தலையில்தான் கட்டுகிறார்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியாக இருக்கிறது.

நமது கேள்வி மிகவும் எளியது… சொத்து வரியோ, காருக்கான வரியோ.. அரசுக்கு செல்லும் வரியை கட்டவேண்டாம் என யோசிக்கும் நடிகர்கள் நாடாள வேண்டும் என யோசிப்பது சரியா?… இவர்கள் நேர்மையாக ஆட்சி செய்வார்கள் என நாம் எப்படி நம்புவது?..

ரசிகர்களிடம் இதற்கு பதில் கிடைக்குமா?…. மீண்டும் விவாதிப்போம்…

Published by
adminram

Recent Posts