ஊகத்துக்கு இடம் கொடுக்காத இயக்குனர் இவர்தான்..!

by adminram |

c17434efa7f8788de24467af3c7769b1

இயக்குனர் மிஷ்கின் ஒரு வித்தியாசமான டைரக்டர். இவரது படங்களை நாம் கலாரசனையுடன் பார்க்கலாம். கதையின் போக்கை யாராலும் எளிதில் தீர்மானிக்க முடியாது. திடீர் திருப்பங்கள் நிறைந்த படங்களாகவே இருக்கும். அடுத்த காட்சி இதுதான் என்ற யூகம் இங்கு பலிக்காது. நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர்.

333c5c736d4b3610a1b99ae2904d70b5-2

செப்டம்பர் 20, 1971ல் பிறந்தவர். இவரது படங்கள் பெரும்பாலும் ஹிட்டானவைதான். யுத்தம் செய், துப்பறிவாளன், சைக்கோ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு 2 ஆகிய படங்களைச் சொல்லலாம்.

ஒரு சில படங்களை இங்கு பார்க்கலாம்.

சித்திரம் பேசுதடி

2006ல் வெளியான படம். இதுதான் இயக்குனர் மிஷ்கினின் முதல் படம். நரேன், பாவனா, கானா உலகநாதன், அஜயன் பாலா உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர் சி.பாபு இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின.

ஆகாயம், ஆகாயம், இடம்பொருள் பாத்த, மழை மழை, இது என்ன, இது என்ன புது, வாள மீனுக்கும், பட்டாம் பூச்சி ஆகிய பாடல்கள் உள்ளன. இவற்றில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற கானா உலகநாதனின் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

அஞ்சாதே

9ae266acc59de7f597f78e0b20f1ae2f

2008ல் வெளியானது. இது மிஷ்கினின் 2வது படைப்பு. நரேன், பிரசன்னா, அஜ்மல் அமீர், விஜயலட்சுமி, லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர் சி.பாபு இசை அமைத்துள்ளார். அச்சம் தவிர், கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன, மனசுக்குள் மனசுக்குள், கண்ணாதாசன் காரைக்குடி, வீணையடி நீ எனக்கு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. திருவிழாக்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இப்பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பாடல் கண்ணதாசன் காரைக்குடி என்ன ஒரு பாடல்...என்ன ஒரு இசை...என நம்மை ஆட்டம் போட வைத்தது.

நந்தலாலா

2010ல் வெளியானது. இது மிஷ்கினின் 3வது படம். மிஷ்கின் கதாநாயகனாக நடித்துள்ளார். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர் ரகங்கள். மெல்ல ஊர்ந்து ஊர்ந்து, ஒண்ணுக்கொண்ணு, தாலாட்டு கேட்க நானும், கை வீசி, ஒரு வாண்டு கூட்டமே ஆகிய பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒரு வாண்டு கூட்டமே ராகதேவன் இளையராஜாவின் காந்தக்குரலில் இடம்பெற்றுள்ளன.

முகமூடி

2012ல் வெளியானது. தமிழில் வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படம். இயக்கியவர் மிஷ்கின். ஜீவா, பூஜா ஹெக்டே, ஆடுகளம் நரேன், நாசர், கிரீஷ் கர்னாட், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். கே இசை அமைத்துள்ளார். வாயை மூடி சும்மா இரு டா, மாயாவி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பிசாசு

b77ebff46117a5fd68eb014fcd7d4b74-1

2014ல் வெளியான திகில் படம். பிரயாகா மார்டின், ராதாரவி, ராஜ்குமார், அஸ்வத் உள்பட பலர் நடித்துள்ளனர். அரோள் கரோலி இசை அமைத்துள்ளார். போகும் பாதை ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போத பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story