பிரம்மாண்ட பங்களாவுக்கு போர்வை போத்திய சூப்பர் ஸ்டார் நடிகர் – பின்னணி என்ன?

by adminram |

144b95f168a81cb19bafe53df5906bcd

நடிகர் ஷாருக் கான் தனது மும்பை பங்களாவை மிகப்பெரிய பிளாஸ்டிக் கவர்களால் மூடியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக் கான் மும்பையில் நான்கு மாடி பிரம்மாண்ட பங்களாவில் வசித்து வருகிறார். அங்கிருந்த படிதான் தன் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ரசிகர்களை அவர் சந்திப்பது வழக்கம். இந்நிலையில் அந்த பங்களாவை ஷாருக் கான் பெரிய பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு மூடியுள்ளது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

67160427-1

ரசிகர்களோ கொரோனா வைரஸில் இருந்து தமது குடும்பத்தினரைக் காப்பதற்காகதான் அவர் இதை செய்துள்ளார் எனக் கருதி வந்தனர். ஆனால் மும்பையில் இப்போது காற்றோடு கூடிய மழை பெய்து வருவதால் சாரல் வீட்டினுள் வருவதை தடுக்கவே இந்த ஏற்பாடு என சொல்லப்படுகிறது.

Next Story