
நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிக்க இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆசைப்பட்டதாக அவர் சொல்லியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது திரைக்கதைகளால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட பாக்ய்ராஜ் இந்தியிலும் அமிதாப் பச்சனை வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஒரு கைதியின் டைரி படத்தின் ரீமேக் தான் அது. அந்த படம் அங்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதையடுத்து மீண்டும் பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பிய அமிதாப் பச்சன், அவரின் மெஹா ஹிட் படமான முந்தானை முடிச்சு படத்தை பார்த்துவிட்டு நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால் ஆக்ஷன் ஹீரோவான தனக்கு இந்த கதை செட்டாகுமா என்ற சந்தேகமும் அவருக்கு எழுந்துள்ளது. அதனால் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடிக்க சம்மதித்துள்ளார். ஒருவேளை படம் ஓடவில்லை என்றால் கூட தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராது என்பதால்.
ஆனால் அவரின் தயாரிப்பாளர் இதற்கு ஒத்துக் கொள்ளாததால் அந்த படம் உருவாகவில்லை. இதை சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில் பாக்யராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார்.





