ரஜினிக்கு ஆதரவு, கமல் ஒரு முட்டாள்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு பேட்டி

இந்த நிலையில் இன்று மீண்டும் பேட்டியளித்த சுவாமி, ‘ரஜினி பாஜகவிற்கு வந்தால் எதிர்க்க மாட்டேன். ஆனால் பழைய சினிமா வசனங்களை பேசினால் எதிர்ப்பேன். இந்து மதத்திற்காக பேசினால் நான் ரஜினியுடன் இருப்பேன். கமல்ஹாசன் ஒரு முட்டாள். அவருக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாரில்லை

மேலும் விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து கூறிய சுப்பிரமணியன் சுவாமி, ‘நடிகர் விஜய் வீட்டில் ஐடி சோதனை அநியாயம் நடந்து இருந்தால் வழக்கு தொடரலாம். அவரிடம் தவறு இல்லையெனில் அவர் பயம் கொள்ள தேவையில்லை’ என்றார்

ரஜினிக்கு அரசியல் ஞானம் இல்லை, அவர் ஒரு நடிகர் மட்டுமே என கூறி வந்த சுவாமி, தற்போது பாஜகவுக்கு வந்தால் மட்டும் ரஜினியை ஆதரிப்பேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Published by
adminram