ஏதாச்சும் சொல்லிடுறீங்க.. ஊமை குத்தா குத்துறாங்க!.. குட் பேட் அக்லி ஃபைட் மாஸ்டர் பேட்டி

by ராம் சுதன் |
ஏதாச்சும் சொல்லிடுறீங்க.. ஊமை குத்தா குத்துறாங்க!.. குட் பேட் அக்லி ஃபைட் மாஸ்டர் பேட்டி
X

விடாமுயற்சி ரிலீஸ்: கடந்த 6 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. ஆனால் படம் பார்த்தவர்கள் ஏன் இந்தப் படத்தை அனைவரும் இந்தளவு விமர்சிக்கிறார்கள், இணையத்தில் ஏன் இந்தளவு நெகட்டிவ்வான விஷயம் விடாமுயற்சி படத்தை பற்றி பேசப்படுகிறது என தெரியவில்லை என்றுதான் புலம்பி வருகிறார்கள்.

மிஸ் ஆன அஜித்: இதுவரை இல்லாத அஜித் படமாக விடாமுயற்சி படம் இருப்பதால் அஜித் ரசிகர்களை தவிற மற்ற ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிய அளவில் விமர்சித்து வருகிறார்கள். இதில் அஜித் ஒரு சாதாரண குடும்பத்தலைவன் எப்படி இருப்பானோ அவனுக்கு கோபம் என்பது எந்தளவுக்கு இருக்குமோ அதைத்தான் காட்டியிருக்கிறார் மகிழ்திருமேனி. மற்ற படங்களை போல் இதில் அஜித்துக்கு மாஸ் கிடையாது, ஆக்‌ஷன் கிடையாது.

அடுத்து குட் பேட் அக்லி: அதனாலேயே படம் பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை. இதில் சண்டைக் காட்சிகளும் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றும் கூறி வருகிறார்கள் .ஆனால் படத்தை பார்த்த பல பிரபலங்கள் விடாமுயற்சி படத்தில் அந்த கார் ஃபைட் சீன் மிகவும் அசத்திவிட்டார் சுப்ரீம் சுந்தர் என்றுதான் கூறுகிறார்கள். ஒரு ஹாலிவுட் தரத்தில் படம் இருக்கிறது. இந்த நிலையில் அஜித்தின் நடிப்பில் அடுத்து வெளியாகும் திரைப்படம் குட் பேட் அக்லி.

மீண்டும் சுப்ரீம் சுந்தர்:இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வெளியாக வேண்டியது. விடாமுயற்சி படத்தினால்தான் படம் ஏப்ரல் மாதம் தள்ளிப் போனது. இந்த படத்திலும் சுப்ரீம் சுந்தர்தான் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் குட் பேட் அக்லி படத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார்.

அதாவது விடாமுயற்சி படம் அஜித் படமாக இல்லை என்றுதான் கூறி வந்தார்கள். நிறைய வாவ் முமெண்ட்ஸ் மிஸ் ஆனது. ஆனால் எந்தளவு படத்தில் மிஸ் செய்தீர்களோ அதைவிட 10 மடங்கு குட் பேட் அக்லி படம் அஜித் படமாக இருக்கும் என சுப்ரீம் சுந்தர் கூறியிருக்கிறார். இந்த பேட்டியை பார்த்த பலரும் எப்பா சும்மா இருங்க.. படத்தை பார்த்து நாங்களே தெரிஞ்சுக்கிறோம் என்றும் கமெண்டில் கூறி வருகின்றனர்.

Next Story