More

கேப்ரியலை தூக்கி ஸ்கோர் செய்த சுரேஷ்…. எல்லாம் உல்டா ஆகிப்போச்சே…..

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி 10 நாட்களுக்கு பிறகே சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தற்போது புது போட்டியாளராக டிவி தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்கு வந்துள்ளதால் பல அதிரடி திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

தொடக்கத்தில் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்த சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த சில நாட்களாக ரசிகர்களின் நன் மதிப்பை பெற்று வருகிறார். நேற்று கேப்ரியலை கேப்டனாக்க அவரை முதுகில் சுமந்து நின்று ரசிகர்களின் அனுதாபத்தை சம்பாதித்துள்ளார். பாலா ரியோவையும், வேல்முருகனை ஆரியும் தூக்கிக் கொண்டு நின்றாலும், சுரேஷின் நம்பிக்கையும், கேப்ரியலை அவர் சமாதனம் செய்த விதமும் பலருக்கும் பிடித்துப்போயுள்ளது.

இதில், போன சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த கவினும் சுரேஷுக்கு ஆதரவு தெரிவித்து டிவிட்டர் பக்கத்தில் ஹார்ட்டின் விட அவரது ரசிகர்களும் தற்போது அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படியே போனால் பலரின் ஆதரவையும் பெற்று சுரேஷ் வெற்றிபெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், இன்னும் 85 நாட்கள் இருக்கிறது. எனவே, பிக்பாஸ் வீட்டில் என்னென்ன திருப்பங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Published by
adminram

Recent Posts