சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு, பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படம் சிம்பு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்த வேண்டியுள்ளது. ஆனால், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பெரும்பாலான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருவதால் மாநாடு திரைப்படமும் ஓடிடியில் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், மாநாடு திரைப்படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். மாநாடு திரைப்படத்தை ஆயுதபூஜை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர். இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…