மகளுடன் ரசித்து பார்த்தேன்! – மாஸ்டர் படத்தை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா

Published on: July 20, 2021
---Advertisement---

a6a12ac19229f5e1a9e7f988929787df-3

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் சம்பளம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சம்பளத்தை நெருங்கி விட்டது. அதாவது அவர் ரூ.100 கோடி சம்பளம் பெறும் நடிகராக மாறியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், இப்படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. எனவே, TNPL கமெண்டரில் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகம் பற்றி, தமிழ் சினிமா பற்றி கேள்வி கேட்க, சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தை ஹிந்தி டப்பிங்கில் மகளுடன் ரசித்து பார்த்தேன். விஜய் ஒரு நல்ல மாஸ்டர் என தெரிவித்தார். விஜய் சிறப்பாக நடித்திருந்தார் என அவர் தெரிவித்தார்.

Leave a Comment