நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் சூர்யா நடிக்கும் படம் இது. இடையில் நவரசா எனும் ஆந்தாலஜி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
பாண்டியராஜ் இயக்கிய வருவது சூர்யாவின் 40வது திரைப்படமாகும். எனவே, இப்படம் சூர்யா 40 என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கில் பிரபலமாகி வரும் பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே டாக்டர் திரைப்படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சூர்யா 40 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வருகிற 22ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…