
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்து நேற்று அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் ரசிகர்களை மிகவும் கவந்துள்ளது. திரைப்பட விமர்சகர்களும் இப்படத்தை மிகவும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக இப்படத்தில் அமைக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது கபிலன், வெற்றி, டான்ஸிங் ரோஸ், ரங்கன் வாத்தியார், வேம்புலி, மீரான், மாஞ்சா கண்ணன், மாரியம்மா, கெவின் டாடி என கதாபாத்திர படைப்புகளை ரஞ்சித் சிறப்பாக அமைத்துள்ளார். அவர்களும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். இப்படத்திற்கு Film companion எனும் நிறுவனம் சார்பாக சிறந்த படத்திற்கு வழங்கப்படும் FC GOLD என்கிற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். ‘சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது! வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.
இப்படத்தில் முதலில் சூர்யாதான் நடிக்கவிருந்தார். அவர் மறுக்கவே அவருக்கு பதில் ஆர்யா நடித்தது குறிப்பிடத்தக்கது.





