அந்த படமும் ஓடிடிதான் - தியேட்டர் அதிபர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த சூர்யா...

by adminram |

77ba9abc6e853c653d2c9a2b08dbcbde-2

கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடிக்கிடந்த போது தயாரிப்பாளர்களின் எதிர்ப்பை மீறி தனது சூரரைப்போற்று திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு பிள்ளையார் சுழி போட்டவர் நடிகர் சூர்யா. இதனால் தியேட்டர் அதிபர்களின் கோபத்திற்கு ஆளானார். அதேபோல், அவரின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியானது. எனவே, இனிமேல் சூர்யா, ஜோதிகா நடிக்கும் திரைப்படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் அறிவித்தனர்.

6ffbaa0f0ee77ecfc9ab153bc62d732b-1-2

ஆனால், சூர்யா பின்வாங்கவில்லை. மேலும், அவரது தயாரிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம், உடன் பிறப்பே, ஓ மை டாக், ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் ஆகிய படங்கள் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவித்து மீண்டும் தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சூர்யா.

2437a42351166da5400c33a86d0fbcf5

இந்நிலையில், பாலா இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள புதிய படத்தையும் ஓடிடியிலேயே ரிலீஸ் செய்வது என முடிவெடுத்துவிட்டாராம் சூர்யா. இப்படியே போனால் சூர்யாவின் அனைத்து படங்களுமே ஓடிடியில்தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story