மீண்டும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் சூர்யா... இயக்குனர் அவர்தானாம்!...
சூர்யா தற்போது 4 திரைப்படங்களை தயாரித்து வருகிறார். மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லராக உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்தவுடன் அண்ணாத்த பட இயக்குனர் சிவா இயக்கத்தில் சூரய நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமான ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் சமீபத்தில் சூர்யாவை சந்தித்து ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையை கூறியுள்ளாராம். ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.
சூர்யா ஏற்கனவே 24 என்கிற சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்துள்ளார். எனவே, ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.