சாவோடு போராடும் எங்களுக்கு வருஷா வருஷம்.. தெய்வம் சார் அவரு..? சூர்யாவை புகழ்ந்து பேசிய பிரபலம்..!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. ரசிகர்களுக்கு பிடித்த ஏகப்பட்ட நல்ல திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் மெனக்கெட்டு நடிக்கக்கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர். அதற்கு எடுத்துக்காட்டாக பேரழகன், வாரணம் ஆயிரம், பிதாமகன், மாயாவி, கஜினி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை கூறிக் கொண்டே போகலாம்.
சமீப நாட்களாக மக்களுக்கு கருத்துக்களை கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதிலும் சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. இவர் கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்களாகியும் இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை.
தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 வேடங்களில் நடிகர் சூர்யா இதில் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிகர் சூர்யா நடித்து வருகின்றார்.
சினிமாவில் பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். நடிகர் சூர்யா நடிப்பை தாண்டி அகரம் என்ற பவுண்டேஷன் மூலமாக ஏழை எளிய குழந்தைகளுக்கு படிப்பு உதவி செய்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் இவர் ஏகப்பட்ட உதவிகளை செய்து வருவதாக ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்து இருக்கின்றார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் சூர்யா குறித்து ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
இவர் தான் கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஸ்டண்ட் கொரியோகிராபராக பணியாற்றியவர். அந்த திரைப்படத்தில் எப்படி எல்லாம் ஸ்டண்ட் காட்சிகள் வந்திருக்கின்றது என்பதை விவரித்த இவர் அதன்பிறகு சூர்யா செய்யும் நல்ல விஷயங்களை பற்றியும் கூறியிருந்தார். பொதுவாக ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உயிர் உத்தரவாதம் கிடையாது.
கண்ணுக்குத் தெரிந்து சாகுற தொழில் செய்யக்கூடியவர்கள் நாங்கள் தான். எங்களுக்கு தற்போது வரை இன்சூரன்ஸ் என்பது கிடையவே கிடையாது. அரசிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம். இப்போதுதான் தமிழக அரசு ஒரு ஸ்கீம் கொடுத்துள்ளது மத்திய அரசு ஒரு ஸ்கீம் கொடுத்துள்ளது. அதையும் நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் அது பெரிய அளவிற்கு இல்லை. இருப்பினும் ஸ்டண்ட் மாஸ்டர்கள், பைட்டஸ்களுக்காக ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் ரூபாய் இன்ஷூரன்ஸ்காக கொடுத்து வருகின்றார் நடிகர் சூர்யா" என அவர் பெருமையாக கூறியிருந்தார்.