Categories: latest news

சாவோடு போராடும் எங்களுக்கு வருஷா வருஷம்.. தெய்வம் சார் அவரு..? சூர்யாவை புகழ்ந்து பேசிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. ரசிகர்களுக்கு பிடித்த ஏகப்பட்ட நல்ல திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் மெனக்கெட்டு நடிக்கக்கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர். அதற்கு எடுத்துக்காட்டாக பேரழகன், வாரணம் ஆயிரம், பிதாமகன், மாயாவி, கஜினி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை கூறிக் கொண்டே போகலாம்.

சமீப நாட்களாக மக்களுக்கு கருத்துக்களை கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதிலும் சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. இவர் கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்களாகியும் இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை.

தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 வேடங்களில் நடிகர் சூர்யா இதில் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிகர் சூர்யா நடித்து வருகின்றார்.

சினிமாவில் பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். நடிகர் சூர்யா நடிப்பை தாண்டி அகரம் என்ற பவுண்டேஷன் மூலமாக ஏழை எளிய குழந்தைகளுக்கு படிப்பு உதவி செய்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் இவர் ஏகப்பட்ட உதவிகளை செய்து வருவதாக ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்து இருக்கின்றார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் சூர்யா குறித்து ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

இவர் தான் கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஸ்டண்ட் கொரியோகிராபராக பணியாற்றியவர். அந்த திரைப்படத்தில் எப்படி எல்லாம் ஸ்டண்ட் காட்சிகள் வந்திருக்கின்றது என்பதை விவரித்த இவர் அதன்பிறகு சூர்யா செய்யும் நல்ல விஷயங்களை பற்றியும் கூறியிருந்தார். பொதுவாக ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உயிர் உத்தரவாதம் கிடையாது.

கண்ணுக்குத் தெரிந்து சாகுற தொழில் செய்யக்கூடியவர்கள் நாங்கள் தான். எங்களுக்கு தற்போது வரை இன்சூரன்ஸ் என்பது கிடையவே கிடையாது. அரசிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம். இப்போதுதான் தமிழக அரசு ஒரு ஸ்கீம் கொடுத்துள்ளது மத்திய அரசு ஒரு ஸ்கீம் கொடுத்துள்ளது. அதையும் நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் அது பெரிய அளவிற்கு இல்லை. இருப்பினும் ஸ்டண்ட் மாஸ்டர்கள், பைட்டஸ்களுக்காக ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் ரூபாய் இன்ஷூரன்ஸ்காக கொடுத்து வருகின்றார் நடிகர் சூர்யா” என அவர் பெருமையாக கூறியிருந்தார்.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago