தனித்தீவில் 100 நாள் : பிக்பாஸுக்கு போட்டியாக வருகிறது புதிய நிகழ்ச்சி..

ஒரே வீட்டில் 100 நாட்கள் தாக்குப்பிடிக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ், மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். தமிழில் கமல்ஹாசன் நடத்த பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிந்துவிட்டது. விரைவில் 5வது சீசன் துவங்கவுள்ளது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கு போட்டியாக புதிய நிகழ்ச்சி விரைவில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. வெளிநாட்டில் புகழ்பெற்ற ‘சர்வைவர்’ (Survivor) நிகழ்ச்சிதான் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளது. போட்டியாளர்களை ஆளே இல்லாத ஒரு தனித்தீவில் இறக்கி விட்டு விடுவார்கள். அங்கேயே அவர்கள் தங்கி இருந்து சவால்களை சந்திக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தரும் டாஸ்க்கையும் செய்து முடிக்க வேண்டும். 100 நாட்கள் தாக்குபிடிக்கும் போட்டியாளருக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை ஜீ நெட்வொர்க் பெற்றுள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்காவில் ஒரு தனித்தீவை வாடகைக்கு எடுத்துள்ளனர். தமிழில் மக்களிடம் பிரபலமானவர்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் இதில் கலந்து கொள்கின்றனர். கொரோனா பரவல் குறைந்து விமானங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதும் இந்நிகழ்சி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram