முதல்ல இவர் ஜாதகத்தை செக் பண்ணுங்க! மீண்டும் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூர்யா

எப்போது சூர்யா ஒரு பெரிய வெற்றியை கொடுக்க போகிறார் என்றளவுக்கு அவர் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட சூர்யாவின் நடிப்பில் வெற்றிப்படம் வந்து வெகு ஆண்டுகளாகி விட்டது. இதில் கங்குவா படத்திற்காகவே இரண்டு ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பெரிய பொருட்செலவில் உருவான கங்குவா படம் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை கொடுக்க வில்லை.
சூப்பர் பிளாப் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் பலரது ட்ரோலுக்கும் கங்குவா படம் ஆளானது. அதற்கேற்ப படத்தை பற்றி சூர்யா உட்பட அனைவரும் பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தனர். ஆனால் பெரிய டிஸ் ஆஸ்டர் என்றே சொல்லலாம். அதன் பிறகு சூர்யா இப்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்து வருகிறார்,
ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது இருக்கும் பெரிய நம்பிக்கையே இந்த ரெட்ரோ படம் தான். ஒரு பக்கம் சூர்யா என்றாலும் கார்த்திக் சுப்பாராஜ் படங்கள் என்றாலே அதில் ஒரு மாஸ், ஆக்ஷன் என கதையோட்டமும் விறுவிறுப்பாக இருக்கும்.
அதனால் ரெட்ரோ படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் படத்தில் நடிக்க போகிறாரா அல்லது இரும்புக்கை மாயாவி படம் உருவாகப் போகிறதா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. ஆனால் மீண்டும் சூர்யா ஞானவேல் ராஜா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறாராம்.
ஆனால் இயக்குனர் யார் என்று உறுதிசெய்யப்படவில்லை. ஏனெனில் கங்குவா படத்திற்கு முன்பு சூர்யா பல வருடங்களுக்கு முன் 24 என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தாலும் ஞானவேல்ராஜாவுக்கு பெரிய நஷ்டம். அந்தப் படம் சரியாக போகவில்லை. அந்த நஷ்டத்தை ஈடுகட்டத்தான் கங்குவா படத்துக்கு ஞானவேல்ராஜாவுக்காக சூர்யா டேட் கொடுத்தாராம்.
ஆனால் கங்குவா படமும் சூப்பர் டூப்பர் பிளாப் ஆனதால் மீண்டும் ஞானவேல்ராஜாவுக்கு இரண்டு படங்களில் நடிக்க டேட் கொடுத்திருக்கிறாராம். இதில் ஒரு படம் 2026 ஆம் ஆண்டு நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.