Categories: latest news

முதல்ல இவர் ஜாதகத்தை செக் பண்ணுங்க! மீண்டும் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூர்யா

எப்போது சூர்யா ஒரு பெரிய வெற்றியை கொடுக்க போகிறார் என்றளவுக்கு அவர் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட சூர்யாவின் நடிப்பில் வெற்றிப்படம் வந்து வெகு ஆண்டுகளாகி விட்டது. இதில் கங்குவா படத்திற்காகவே இரண்டு ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பெரிய பொருட்செலவில் உருவான கங்குவா படம் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை கொடுக்க வில்லை.

சூப்பர் பிளாப் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் பலரது ட்ரோலுக்கும் கங்குவா படம் ஆளானது. அதற்கேற்ப படத்தை பற்றி சூர்யா உட்பட அனைவரும் பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தனர். ஆனால் பெரிய டிஸ் ஆஸ்டர் என்றே சொல்லலாம். அதன் பிறகு சூர்யா இப்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்து வருகிறார்,

ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது இருக்கும் பெரிய நம்பிக்கையே இந்த ரெட்ரோ படம் தான். ஒரு பக்கம் சூர்யா என்றாலும் கார்த்திக் சுப்பாராஜ் படங்கள் என்றாலே அதில் ஒரு மாஸ், ஆக்‌ஷன் என கதையோட்டமும் விறுவிறுப்பாக இருக்கும்.

அதனால் ரெட்ரோ படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் படத்தில் நடிக்க போகிறாரா அல்லது இரும்புக்கை மாயாவி படம் உருவாகப் போகிறதா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. ஆனால் மீண்டும் சூர்யா ஞானவேல் ராஜா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறாராம்.

ஆனால் இயக்குனர் யார் என்று உறுதிசெய்யப்படவில்லை. ஏனெனில் கங்குவா படத்திற்கு முன்பு சூர்யா பல வருடங்களுக்கு முன் 24 என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தாலும் ஞானவேல்ராஜாவுக்கு பெரிய நஷ்டம். அந்தப் படம் சரியாக போகவில்லை. அந்த நஷ்டத்தை ஈடுகட்டத்தான் கங்குவா படத்துக்கு ஞானவேல்ராஜாவுக்காக சூர்யா டேட் கொடுத்தாராம்.

ஆனால் கங்குவா படமும் சூப்பர் டூப்பர் பிளாப் ஆனதால் மீண்டும் ஞானவேல்ராஜாவுக்கு இரண்டு படங்களில் நடிக்க டேட் கொடுத்திருக்கிறாராம். இதில் ஒரு படம் 2026 ஆம் ஆண்டு நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

3 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

4 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

11 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

12 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

13 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago