என் சிங்கத்திற்கு ஒரு சிறிய பரிசு.... சூர்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜோதிகா!

by adminram |

73ed6733dc43f56667497f981b31ea2c-1
47a1b0bdaa9618634309fb2a534fdb27-2

நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி இன்று தங்களது 15வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நட்சத்திர தம்பதிகளான இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா மனைவி ஜோதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போஸ்ட் செய்திருந்தார்.

6a3f5cecf4f7c09a4661f68c8c34b964-4

இந்நிலையில் ஜோதிகா திருமண நாளில் தன் கணவருக்கு ஓவியத்தை பரிசாக அளித்துள்ளார். அந்த அழகிய பதிவில், " சரியான நபரை சந்திப்பது விதி. அவரது மனைவியாக மாறுவது ஒரு விருப்பம். ஆனால், ஒரே நபரை ஒவ்வொரு நாளும் அதிகமாக காதலிப்பது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது - அவர் அவர் என்பதால் மட்டுமே - ஒரு உண்மையான மனிதன். என் குழந்தைகளின் தந்தை, என் கணவர், என் சக நட்சத்திரம், மாறுவேடத்தில் என் அம்மா. மற்றும் மிக முக்கியமாக என் சிறந்த நண்பர். இந்த சிறப்பு தினத்தில் என் சிங்கத்திற்கு ஒரு சிறிய பரிசு என கூறி இரண்டு சிங்கங்கள் கட்டியணைப்பது போன்ற ஒரு ஓவியம் மற்றும் சூர்யாவின் ஓவியம் என இரண்டையும் அவரே வரைந்து பரிசளித்துள்ளார்.

Next Story