More

சூர்யா மற்றும் கார்த்தி இணையும் முதல் படம்… அதுவும் ரீமேக் படத்தில்!

சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் முதல் முறையாக ஒரு ரீமேக் படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

Advertising
Advertising

பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகிய இருவரும் நடித்து மலையாளத்தில் பெருவெற்றி பெற்ற திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளது இந்த திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக் உரிமைகளை வாங்கியுள்ள பைவ்ஸ்டார் கதிரேசன் இதை விரைவில் படமாக்கும் முனைப்பில் இருக்கிறார்.

மேலும் அந்த படத்தில் சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அதில் சூர்யா மற்றும் அவரது சகோதரர் கார்த்தி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இருவரும் தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக நடித்துக் கொண்டு இருந்தாலும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் மட்டும் சூர்யா கௌரவ வேடத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Published by
adminram

Recent Posts