நடிகர் சூர்யா தான் நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவதாக அறிவித்தார். மேலும், இப்படத்தின் வியாபார தொகையில் ரூ.5 கோடியை திரைத்துறையினர், பொதுமக்கள், கொரொனா பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் என பலருக்கும் பிரித்து கொடுப்பதாக அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, திரையுலகினருக்கு ரூ.1.5 கோடியை நிதியுதவியாக அவர் அளித்துள்ளார். திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு ரூ. 80 லட்சமும், இயக்குனர் சங்கத்திற்கு ரூ.20 லட்சமும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.30 லட்சமும், நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் என பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த சங்கங்களில் நொடிந்து போயுள்ளவர்களுக்கு இந்த தொகை பிரித்துக்கொடுக்கப்படும் எனத்தெரிகிறது.
அவருக்கு பதிலாக அவரின் தந்தை சிவக்குமார் இந்த தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யா ரசிகர்கள் உள்ளிட்ட நெட்டிசன்கள் பலரும் சூர்யாவின் செயலை பாராட்டி வருகின்றனர்.
Sorgavaasal: ஆர்.ஜே.பாலாஜியின்…
Vidamuyarchi: நேற்று…
பாலா இயக்கிய…
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…